பெங்களூரு: "நான் ஜோதிடர் அல்ல. ஆனாலும் இந்தத் தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் தோற்கும்” என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.
கர்நாடக தேர்தலையொட்டி மத்திய குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருந்தி இரானி பெங்களூருவில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இந்துக்களை வெறுக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. பஜ்ரங் தள அமைப்பை ஒரு தீவிரவாத அமைப்புடன் ஒப்பீடு செய்ததன் மூலம் ஹனுமான் பக்தர்களை அக்கட்சி அவமதித்துள்ளது.
ஜெய் பஜ்ரங் பலி கோஷமிட்டால் கூட தேர்தல் ஆணையத்திடம் முறையிடுகிறது. இதற்கு காங்கிரஸ் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நான் ஒரு ஜோதிடர் அல்ல. ஆனால் இந்தத் தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் தோல்வி அடையும். பாஜக ஆட்சி அமைக்கும் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்'' என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago