மல்லிகார்ஜுன கார்கேவை கொல்ல சதி - பாஜக  மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

பெங்களூரு: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்ய பாஜக சதித் திட்டம் தீட்டியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த விவாகரம் குறித்து இன்று(சனிக்கிழமை) பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜ்வாலா, சித்தாப்பூர் பாஜக வேட்பாளர் மணிகண்ட ரத்தோட், மல்லிகார்ஜுன கார்கேவை அவதூறான வார்த்தைகளில் திட்டி அவரது குடும்பத்தினரை கொலை செய்துவிடுவேன் என்று பேசும் ஆடியோவை வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், "காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் அவரது மனைவி, குழந்தைகளையும் கொலை செய்து விடுவதாக கூறுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அப்படி பேசுவது சாதாரணமானவரும் இல்லை. அது வேறு யாரும் இல்லை பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வர் பொம்மையின் செல்லப்பிள்ளையான சித்தாப்பூர் பாஜக வேட்பாளரே தான். அவரது முந்தைய வரலாறு எல்லாம் என்னைவிட உங்களுக்கு நன்றாக தெரியும்.

பிரதமர் தொடர்ந்து அமைதியாகவே இருப்பார். கர்நாடக போலீஸும், தேர்தல் ஆணையமும் மவுனமாகவே இருக்கும். ஆனால் கர்நாடக மக்கள் அமைதியாக இருக்கப்போவதில்லை. அவர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்" என்று தெரிவித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பிரிவின் தலைவர் பவன் கேராவும் உடன் இருந்தார். பின்னர் சர்ச்சைக்குரிய அந்த ஆடியோவை காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

சித்தாபூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் கார்கேவின் மகன் பிரியங்க் கார்கேவை எதிர்த்து பாஜக சார்பில் களமிறங்குகிறார் மணிகண்ட ரதோட். சர்ச்சைக்குரிய வேட்பாளரான இவர் மீது 30க்கும் அதிகமான வழக்குகள் உள்ளன. முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13ம் தேதி பிரியங்க் கார்கேவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்காக கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கடுமையான குற்றச்சாட்டுக்கு பாஜக தரப்பிலிருந்து இதுவரை எந்தவித பதிலும் அளிக்கப்படவில்லை. மேலும் பெங்களூருவில் பிரதமர் மோடியின் ‘மெகா ரோட் ஷோ’ தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

29 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்