புதுடெல்லி: இருசக்கர வாகனத்தில் அதிவேக பயணத்தின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளங்களை கொண்டிருந்த பிரபல யூடியூபர் அகஸ்தய் சவுகான் விலை உயர்ந்த பைக்கில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முயன்றபோது சாலை விபத்தில் உயிரிழந்தார்.
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்தவர் அகஸ்தய் சவுகான். 25 வயதான இவர், விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களை பற்றி ரிவியூவ் செய்வதோடு, மோட்டார் சைக்கிள்களில் அதிவேகத்தில் சென்று சாகசம் செய்யும் வீடியோக்களை ‘புரோ ரைடர் 1000’ என்ற யூடியூப் சானலில் பதிவிட்டுவந்தார். இவரது யூடியூப் சானல் 12 லட்சம் பார்வையாளர்களை கொண்டிருந்தது.
இந்நிலையில் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடிய ஆயிரம் சிசி திறன்கொண்ட கவாசாகி நின்ஜா இசட்எக்ஸ்10ஆர் என்ற பைக்கின் முழு வேகத்தையும் சோதித்து பார்க்க முடிவு செய்தார் அகஸ்தய். இதற்காக கடந்த புதன்கிழமை, யமுனா விரைவுச் சாலையில் ஆக்ராவில் இருந்து டெல்லியை நோக்கி பயணித்தார் அகஸ்தய்.
இதனை வீடியோவாக பதிவுசெய்து தனது சேனலில் பதிவிடுவதற்கான பணிகளை மேற்கொண்டபடி பைக்கை இயக்கினார். செல்லும் வழியில் பைக்கில் பயணித்த மற்ற வாகன ஓட்டிகளிடம் பேசியவாறும், அவர்களை தன்னைவிட அதிக வேகத்தில் செல்லுமாறும் கூறியபடி சென்றார். பின்னர் அவர்களை விட மின்னல் வேகத்தில் பறப்பதுமாக ரன்னிங் கமென்ட்ரி கூறியவாறே பைக்கை ஒட்டிச்சென்றார்.
» ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம்விட எதிர்ப்பு - தன்னிடம் ஒப்படைக்க கோரி ஜெ.தீபா தரப்பு வாதம்
வெறும் 3 வினாடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தையும், அடுத்த 10 வினாடிக்குள் 200 கிலோ மீட்டர் வேகத்தையும் எட்டும் திறன் கொண்ட இந்த பைக்கில் 47-வது மைல் பாயின்ட் என்ற இடத்தின் அருகே சென்று கொண்டிருந்த அகஸ்தய், தற்போது 300 கிலோ மீட்டர் வேகத்தை எட்ட உள்ளதாக தெரிவித்தார். அப்போது, பைக்கை கட்டுப்படுத்த இயலாமல் தடுமாறி சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் மோதினார்.
மோதிய வேகத்தில் பைக் தூக்கிவீசப்பட்டது. அவர் அணிந்திருந்த ஹெல்மெட் பல துண்டுகளாக உடைந்தது. தலையில் பலத்த காயம் அடைந்த அகஸ்தய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
யூடியூபர் ஓட்டிக்கொண்டிருந்த கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்10ஆர் பைக் மணிக்கு சுமார் 300 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது. இந்த சூப்பர் பைக் இந்தியாவில் ரூ.16 லட்சத்திற்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் 200 பிஎஸ் ஆற்றலையும் 115 எம்எம் முறுக்குவிசையையும் வெளிப்படுத்தக்கூடிய இன்லைன் நான்கு எஞ்சினுடன் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. 207 கிலோ எடை கொண்டது. சாதாரணமான 125முதல் 150 சிசி திறன் கொண்ட பைக்குகளைவிட சுமார் 15 மடங்கு திறன் கொண்டது கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்10ஆர். மேலும் இந்தியாவில் வழக்கமான ரூ.10 லட்சம் மதிப்பிலான செடானை விட இரண்டு மடங்கு திறன் கொண்டது.
இந்த பைக் அதிவேகத்தில் செல்லக்கூடியது. இதில் 0-100 கிமீ வேகத்தை 3 வினாடிகளுக்குள் மற்றும் 0-200 கி.மீ. வேகத்தை வெறும் 10 வினாடிகளில் துரிதப்படுத்த முடியும்.இந்த பைக்கை பொது சாலைகளில் அனுபவம் வாய்ந்த ரைடர்கள் கையாள்வது கூட மிகவும் ஆபத்தானது என கூறப்படுகிறது.
கடைசி வீடியோவில்...: அகஸ்தய் தனது சானலில் பதிவேற்றிய கடைசி வீடியோவில், நான் டெல்லிக்குச் செல்கிறேன், அங்கு பைக்கில் எவ்வளவு வேகமாக செல்ல முடியும் என்பதை சரிபார்க்கப் போகிறேன். இதற்காக பைக்கை 300 கிலோ மீட்டர் வேகத்தில் எடுத்துச் செல்கிறேன், அதைத் தாண்டிச் செல்ல முடியுமா என்று பார்க்கிறேன் என அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago