குஜராத்தில் காங்கிரஸ் சார்பில் தொடங்கவுள்ள 3 நாள் யாத்திரை பயணத்தை மாட்டு வண்டியை ஓட்டித் தொடங்கி வைக்கிறார் அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி.
துவாரகை கிருஷ்ணர் கோயிலில் வழிபாட்டுடன் தங்களது யாத்திரையைத் தொடங்கும் ராகுல், முதலில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரத்தில் திறந்த ஜீப்பில் விழாவைத் தொடங்குவதாக இருந்தது. ஆனால் அதற்கு உள்ளூர் அதிகாரிகள் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.
இதனையடுத்து ராகுல் காந்தி, பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் மக்கள் அதிகம் வாழும் கிராமமொன்றைத் தேர்ந்தெடுத்து அங்குள்ள பாரம்பரியம் மிக்க மாட்டு வண்டியை ஓட்டி விழாவைத் தொடங்கி வைக்க உள்ளார்.
அத்துடன் அங்குள்ள விவசாயிகள், மீனவர்கள், கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட பலரைச் சந்திக்க உள்ளார். ஒரே நாளில் துவாரகை மற்றும் ஜாம்நகரில் உள்ள பொதுமக்களை சந்திக்கிறார் ராகுல் காந்தி.
அத்துடன் நாளின் இறுதியில் ஜாம்நகரில் உள்ள சிறு வணிகர்கள் மற்றும் தொழிலதிபர்களைச் சந்திக்கிறார். அப்போது ஜிஎஸ்டி அறிமுகத்தால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து அவர்களுடன் விவாதிக்க உள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
27 mins ago
இந்தியா
54 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago