திருப்பதியில் பிரம்மோற்சவம் இன்று தொடங்குகிறது

By என்.மகேஷ் குமார்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா இன்று தொடங்குகிறது. இன்று மாலை தங்க கொடி மரத்தில் கருட சின்னம் பொறித்த கொடி ஏற்றப்பட்ட பின்னர், பெரிய சேஷ வாகன சேவை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து 24-ம் தேதி காலை சின்ன சேஷ வாகனம், இரவு அன்ன வாகனம், 25-ம் தேதி காலை சிம்ம வாகனம், இரவு முத்துப்பல்லக்கு வாகனம், 26-ம் தேதி காலை கற்ப விருட்ச வாகனம், இரவு சர்வ பூபால வாகன சேவை நடைபெறுகிறது.

5-ம் நாளான 27-ம் தேதி காலை மோகினி அவதாரமும், இரவு கருட சேவையும் நடைபெறுகிறது. 28-ம் தேதி காலை ஹனுமன் வாகனம், மாலை தங்க தேரோட்டம், இரவு கஜ வாகனம், 29-ம் தேதி காலை சூர்ய பிரபை, இரவு சந்திர பிரபை, 30-ம் தேதி காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன சேவையும் நடைபெறுகிறது. நிறைவு நாளான அக்டோபர் 1-ம் தேதி காலை 6 மணி முதல் 9 மணி வரை சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் 9 மணிக்கு பிரம்மோற்சவ கொடி இறக்க நிகழ்ச்சி நடக்கிறது. அதைத் தொடர்ந்து விழா நிறைவுபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்