ஆந்திர தலைநகரை உருவாக்க இயக்குநர் ராஜமவுலியிடம் ஆலோசனை கேட்க முடிவு

By என்.மகேஷ் குமார்

ஆந்திர தலைநகர் அமராவதியை உருவாக்குவதில் பிரபல இயக்குநர் ராஜமவுலியின் ஆலோசனையை ஆந்திர அரசு நாடவுள்ளது.

தலைநகர் அமராவதியை உலகத்தரம் வாய்ந்த நகரமாக நிர்மாணிக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு விரும்புகிறார். இதற்காக ஜப்பானிலும் லண்டன் போன்ற நகரங்களிலும் உள்ள புகழ்பெற்ற கட்டிடக்கலை நிபுணர்களை தலைநகரின் வரைபடம் தயாரித்து தருமாறு ஆந்திர அரசு கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், லண்டனை சேர்ந்த நார்மன் போஸ்டர் என்ற கட்டுமான நிறுவனத்தினர் நேற்று காலை அமராவதியில் இதற்கான வரைபடங்களை காட்டினர். இதில் சட்டப்பேரவை, உயர் நீதிமன்றம், ராஜ்பவன், தலைமைச் செயலகம், அமைச்சர்களின் வீடுகள், அரசு ஊழியர் குடியிருப்புகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.

இவற்றை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், உயரதிகாரிகள் நேற்று பரிசீலனை செய்தனர். இவற்றில் சில வரைபடங்கள் மட்டுமே நன்றாக இருப்பதாக முதல்வர் தெரிவித்தார். மேலும் சில நாட்கள் அவகாசம் எடுத்துக்கொண்டு உலகில் மிகப் பிரபலமான 25 கட்டிடங்களைப் பரிசீலித்து, அவற்றில் 10 கட்டிடங்களை தேர்வுசெய்து அதன் அடிப்படையில் வரைபடங்கள் தயாரிக்குமாறு அறிவுறுத்தினார்.

இதில் ஆந்திர மாநிலத்தின் தனியார் மற்றும் அரசு கட்டிடக்கலை நிபுணர்கள் சிலர் மற்றும் இயக்குநர் ராஜமவுலியின் ஆலோசனையை பெறுமாறு தலைநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் (சிஆர்டிஏ) அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்