பெங்களூரு: கர்நாடகாவில் மே 10-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா நேற்று பெங்களூருவில் வெளியிட, முதல்வர் பசவராஜ் பொம்மை பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் ஜே.பி.நட்டா செய்தியாளர்களிடம் கூறியதாவது. பாஜக ஆட்சிக்கு வந்தால் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்ப அட்டைதாரர்களுக்கு உகாதி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி ஆகிய பண்டிகைகளின்போது, அதாவது ஆண்டுக்கு 3 இலவச காஸ் சிலிண்டர் வழங்கப்படும். வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தினசரி அரை லிட்டர் நந்தினி பால் வழங்கப்படும். மாதந்தோறும் 5 கிலோ அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும்.
10 லட்சம் வீடற்ற மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும். 10 லட்சம் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும். 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை இலவச மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு நகராட்சியிலும் மலிவு விலை ‘அடல் உணவகம்' திறக்கப்படும். பட்டியலினத்தை சேர்ந்த குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் ரூ.10 ஆயிரம் வரவு வைக்கப்படும். அனைத்து வார்டுகளிலும் இலவச சுகாதார மையங்கள் திறக்கப்படும்.
உயர்மட்ட குழுவின் பரிந்துரையின்படி கர்நாடகாவில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும்.ரூ.1,000 கோடி செலவில் புராதன கோயில்கள் புதுப்பிக்கப்படும். இவ்வாறு ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா கூறும்போது, ‘‘இலவச கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்று சமீபத்தில் கூட பிரதமர் மோடி பேசினார். ஆனால் இப்போது மக்களை ஏமாற்றும் வகையில் இலவசங்களை பாஜக வெளியிட்டுள்ளது. இந்த திடீர் மாற்றம் ஏன்?’’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
38 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
21 hours ago