இன்றைய உலகைக் கட்டியெழுப்புவதில் தொழிலாளர்களின் பங்களிப்பு மற்றும் தியாகத்தை சர்வதேச தொழிலாளர் தினம் குறிக்கிறது.
நியாயமான மற்றும் சமமான ஊதியம், பாதுகாப்பான பணிச்சூழல், பணியிடம், நீீதிமன்றங்கள் மற்றும் அரசாங்கத்தில் அவர்களுக்கு குரல் கொடுக்கும் உரிமை ஆகியவற்றுக்காக தொழிலாளர்கள் நடத்திய நீண்ட போராட்டத்தை இன்று நாம் நினைவில் கொள்கிறோம்.
சுதந்திரத்துக்குப் பிறகு தொழிலாளர்களை பாதுகாத்து அரசாங்கங்கள் அதிகாரம் அளித்துள்ளன. ஆனால், துரதிருஷ்டவசமாக தொழிலாளர்களின் உரிமையை மோடி அரசாங்கம் பின்னோக்கி தள்ளியுள்ளது.
3 விவசாய சட்டங்களைப் போல் 4 தொழிலாளர் சட்டத் திருத்தங்களும் நாடாளுமன்றத்தில் அவசர அவசரமாக கொண்டுவரப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டன. தொழிலாளர் சட்ட திருத்தங்களில் அபாயகரமான குறைபாடுகள் உள்ளன. இவை தொழிலாளர்களுக்கு எதிரானவை.
முதலாவதாக, பெரும்பாலான தொழிலாளர்கள் அல்லது நிறுவனங்களுக்கு சட்ட திருத்த விதிமுறை பொருந்தாது. உதாரண மாக, 300 பேருக்கும் குறைவானோர் வேலை செய்யும் நிறுவனங்கள் அனுமதியின்றி தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யலாம்.
அல்லது ஆலைகளை மூடலாம். 50-க்கும்குறைவான தொழிலாளர்களை பணியமர்த்தும் ஒப்பந்ததாரர்களுக்கு பணியிட பாதுகாப்புச் சட்டங்களில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, காப்பீடு மற்றும் மகப்பேறு பலன்கள் போன்ற சலுகைகள் சிறு நிறுவனங்களுக்கு கிடைக்காது.
இரண்டாவதாக, ஒரு நிறுவனத்துக்கு விதிமுறை பொருந்தினாலும், பணியிட பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு மற்றும் ஆட்குறைப்பு அல்லது மூடல் ஆகிய பிரச்சினைகளின் போது, சம்பந்தப்பட்ட ஆலைகளுக்கு ஆதரவாக அரசாங்கம் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கும்.
மூன்றாவதாக, தொழிற்சங்கம் அமைப்பதை கடினமாக்குவதன் மூலம், இரண்டு வாரங்கள் முன்னறிவிப்பின்றி வேலைநிறுத் தம் செய்தால் அது சட்டவிரோதம் என அறிவிக்கப்படும். அத்தகைய வேலை நிறுத்தத்தை ஆதரிப்பவர்களுக்கு அபராதம் விதிப்பதன் மூலம், தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடும் தொழிற்சங்கங்கள் பலவீனப்படுத்தப்படும்.
நான்காவதாக, திருத்தப்பட்ட விதிகள் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களை புறக்கணிக்கின்றன. இப்படி இருந்தால் எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் இல்லாத கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு எப்படி உதவ முடியும்? ஒரு தொழிலாளி வேலையை இழக்கும் போதோ அல்லது காயம் ஏற்படும் போதோ போராடுகிறார். இந்த விதி திருத்தங்கள் அவர்களுக்கு பாதகமாக அமையும்.
தற்போது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.1 சதவிகிதம் என்ற விகி தத்தில் உள்ளது. இதனால் வருங்கால வைப்பு நிதி சேமிப்பு தொழிலாளர்களின் கண்ணியமான ஓய்வு வாழ்க்கைக்கு போதுமானதாக இருக்காது.
ஒரு தலைமுறைக்குள் கோடிக்கணக்கான தொழிலாளர்களை குறிப்பாக தலித்,பழங்குடியினர் மற்றும் பிற பின்தங்கிய சமூகத்தினரை நடுத்தர வர்க்கமாக பொதுத்துறை நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. அவர்களது குழந்தைகளுக்கு நல்ல கல்வியைவழங்க முடிந்தது. இதில் பலர் இன்றைக்குமருத்துவர்களாக, பொறியாளர்களாக, வங்கியாளர்களாக மற்றும் தொழிற்துறையினராக இருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 30 லட்சத்துக்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ளன. சிறப்பாக செயல்படும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுவதன் மூலம் இந்த பாதுகாப்பு வேகமாக சிதைந்து வருகிறது.
மோடி அரசின் முழுப் பொருளாதாரக் கொள்கையும் முதலாளித்துவத்துக்கு ஆதரவாக உள்ளது. தொழிலாளர்களின் வருவாய் மற்றும் நிலையை பலவீனப்படுத்துகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்ற சமூக நலத்திட் டங்களை மோடி அரசு சிதைத்து வருகிறது.
தொழிலாளர்கள் உரிமை என்பது நியாயமான ஊதிய உயர்வு மட்டுமல்ல. தொழிலாளர்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பதாகவும் இருக்க வேண்டும். இது நீண்ட கால நமது பொருளாதாரத்துக்கு முக்கியமானது. இன்றைக்கு படிக்காத, வேலையில்லாத 17.5 கோடி இளைஞர்களின் பேரழிவு சூழலை நாம் எதிர்கொள்கிறோம்.
பிரதமர் மோடியின் அரசில் தொழிலாளர்களின் குரல் கேட்கப்படுவதில்லை என்பதற்கு இவை உதாரணங்கள். கரோனா காலத்தில் முன்னறிவிப்பின்றி பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டபோது, நகரங்களில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் வேலையில்லாமல் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள் என்பதை நினைவுகூருங்கள். அரசாங்கம் இந்த தொழிலாளர்களைப் பற்றி ஒரு கணம் சிந்தித்திருந்தால் மனிதாபிமானமற்ற சம்பவங்கள் நிகழ்ந்திருக்காது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், நான் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தபோது, 12 கோடி அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்டது. இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநில அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுத்துள்ளன.
நான் ஒரு தொழிலாளியின் மகன். ஒரு தொழிற்சங்கத்தை வழிநடத்தியவன். இன்று தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளைச் சமாளிக்க இன்னும் நிறைய தேவை உள்ளது என்பதைஅறிவேன். முடிவெடுப்பதில் தொழிலாளர்களை புறக்கணிப்பதை நிறுத்துவதும், அதற்குப் பதிலாக தொழிலாளியின் குரலுக்குப் புத்துயிர் கொடுப்பதும் முதல் படியாகும்.
- மல்லிகார்ஜுன் கார்கே | தலைவர், இந்திய தேசிய காங்கிரஸ்
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago