திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 2-ம் நாளான நேற்று காலை சிறிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி மாட வீதிகளில் உலா வந்து பக்தர் களுக்கு காட்சியளித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாள், ஆந்திர அரசு சார்பில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்கினார். மேலும், விஜயவாடாவைச் சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்திய பக்தர் ராமலிங்க ராஜு என்பவர் 30 கிலோ எடையில் தயாரிக்கப்பட்ட ரூ.11 கோடி மதிப்பிலான தங்க காசு லட்சுமி ஹாரத்தை ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்கினார். பிரம்மோற்சவ விழாவின் முதல் நாள் இரவு பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி, 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதனைத் தொடர்ந்து 2-ம் நாளான நேற்று காலை, வாசுகி யாக கருதப்படும் 5 தலைகள் கொண்ட சிறிய சேஷ வாகனத்தில், உற்சவரான மலையப்ப சுவாமி ஸ்ரீகிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளினார்.
பின்னர் 4 மாட வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வழி நெடுகிலும் பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என கோஷமிட்டு, பக்தி பரவசத்துடன் சுவாமியை வழிபட்டனர். பின்னர் மாலை திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago