வெளிநாட்டு பண பரிவர்த்தனை தொடர்பாக பைஜூஸ் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை

By செய்திப்பிரிவு

பெங்களூரு: பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் வழியாக கல்வி வழங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனம் பைஜூஸ். இந்நிறுவனத்துக்கு தொடர்புடைய 3 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக அமலாக்கத் துறை நேற்று தெரிவித்தது.

பள்ளி மாணவர்கள் மற்றும் நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கும் நிறுவனமாக பைஜூஸ் செயல்பட்டு வருகிறது. 2011-ம் ஆண்டு சில லட்சம் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட பைஜூஸ் நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு ரூ.1.8 லட்சம் கோடியாக உள்ளது.

இந்நிலையில், பைஜூஸ் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பைஜு ரவீந்திரனின் 2 அலுவலகங்கள் மற்றும் அவரது வீடு என 3 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியுள்ளது.

அமலாக்கத் துறை கூறுகையில், “பைஜு நிறுவனம் மீது தெரிவிக்கப்பட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போதைய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன.

2011-2023 காலகட்டத்தில் பைஜூஸ் நிறுவனத்துக்கு ரூ.28,000 கோடி வெளிநாடுகளிலிருந்து அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது. அதேபோல் இந்தக் காலகட்டத்தில் இந்நிறுவனம் சார்பாக வெளிநாடுகளில் ரூ.9,754 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

இந்தச் சோதனை குறித்து பைஜு ஸ் நிறுவனம் கூறுகையில், “இது வழக்கமாக நடத்தப்படும் சோதனை. எங்கள் நிறுவனம் அனைத்து விதிகளையும் முறையாக கடைபிடித்து வருகிறது. அமலாக்கத் துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

இந்தியா

6 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்