வீட்டை புதுப்பிக்க ரூ.45 கோடி செலவிட்ட கேஜ்ரிவால் - பாஜக குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தனது வீட்டை புதுப்பிக்க ரூ.45 கோடி வரிப் பணத்தை செலவிட்டுள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

பாஜக செய்தித் தொடர்பாளர் சாம்பிட் பத்ரா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அர்விந்த் கேஜ்ரிவால், அரசியலுக்கு வந்தபோது நேர்மை மற்றும் எளிமையை ஊக்குவிப்பேன் என்றார். ஆனால் அதை அவர் மறந்துவிட்டார். தன்னை மகாராஜா என நினைத்துக்கொண்டு ஆடம்பர வாழ்க்கைக்கு ஆர்வமாக இருக்கிறார். கேஜ்ரிவால் தனது வீட்டை புதுப்பிக்க ரூ.45 கோடிக்கு மேல்மக்கள் வரிப்பணத்தை செலவிட்டுள்ளார்.

வியட்நாமில் இருந்து வரவ ழைக்கப்பட்ட விலையுயர்ந்த பளிங்கு கற்கள் கேஜ்ரிவால் வீட்டில் பதிக்கப்பட்டுள்ளன. மரக்கதவுகள், திரைச்சீலைகள் ஒவ்வொன்றுக்கும் லட்சக்கணக் கில் செலவிடப்பட்டுள்ளது. ஒருதிரைச்சீலைக்கு மட்டும் ரூ.7.94லட்சத்துக்கு மேல் செலவாகியுள்ளது. இவ்வாறு சாம்பிட் பத்ரா கூறியிருந்தார்.

இதற்கு, பதில் அளித்துள்ள ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர், ‘‘1942-ல்கட்டப்பட்ட இந்த வீடு அர்விந்த்கேஜ்ரிவாலுக்கு ஒதுக்கப்பட் டுள்ளது. அதன் கூரை 3 முறை பெயர்ந்து விழுந்துள்ளது. துணைநிலை ஆளுநரின் வீட்டை புதுப்பிக்க இதைவிட அதிகமாகசெலவிடப்படுகிறது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE