திருமலை திருப்பதியில் மாற்றுத் திறனாளி பக்தர்கள் 1008 பேர் இலவச தரிசனம்

By என்.மகேஷ்குமார்


திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழக கோயில்களின் தலைவர் சேகர்ரெட்டி தலைமையில், ராஜஸ்தான் இளைஞர் சங்கம் மற்றும் சென்னை ஃபுட் பேங்க் ஆகியோரின் ஒத்துழைப்பில் நேற்றுமுன்தினம் சென்னையிலிருந்து 5 வயது முதல் 70 வயது வரை உள்ள மாற்று திறனாளிகள் ரயில் மூலம் இலவசமாக திருப்பதிக்கு அழைத்து வந்து, அங்கிருந்து திருமலைக்கு அழைத்து சென்று, ஏழுமலையானை தேவஸ்தானம் சார்பில் இலவச தரிசன பாக்கியத்தை வழங்கினர்.

இதில் 160 பேர்கண் பார்வையற்றவர்கள், 100 பேர் மற்ற உடல் பாகங்களில் ஊனங்களை கொண்டவர்கள், 108 பேர் 65 வயதுக்கும் மேற்பட்டவர்கள், 50 பேர் மன நலம் குன்றியவர்கள், மீதமுள்ளவர்கள் பிறப்பிலேயே காது மற்றும் வாய் பேச இயலாதவர்கள் என மொத்தம் 1008 பேரை சேகர் ரெட்டி தலைமையிலான குழுதிருமலைக்கு அழைத்து வந்தது.

பின்னர், தேவஸ்தானத்தின் ஒப்புதலின் பேரில் இவர்கள் அனைவரும் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

கண் பார்வையற்றவர்கள் கூறும்போது, சுவாமி எப்படி இருப்பார் என மனக் கண்ணில் ஒருதோற்றத்தை ஏற்படுத்தி கொண்டு தரிசனம் செய்தோம் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE