ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் 10 காவலர்கள் உள்பட 11 பேர் உயிரிழக்க காரணமாக அமைந்த மாவோயிஸ்டுகளின் வெடிகுண்டு தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தண்டேவாடா மாவட்டத்தின் அரண்பூர் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, மாவட்ட காவல் படையை (DRG) சேர்ந்த போலீசார் ஒரு வேனில் அங்கு சென்றனர். தேடுதல் வேட்டை முடிந்து அவர்கள் திரும்போதும் அரண்பூர் சாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐஇடி குண்டு வெடித்துள்ளது. இதில் 10 காவலர்கள், ஒரு வாகன ஓட்டி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
காவலர்கள் மீது நடத்தப்பட்ட இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்தத் தாக்குதலில் வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்துவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தண்டேவாடாவில் சத்தீஸ்கர் காவலர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த தாக்குதலில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த துணிச்சல்மிக்க காவலர்களுக்கு எனது மரியாதையை உரித்தாக்குகிறேன். இவர்களது தியாகம் எப்போதும் நினைவு கூறப்படும். அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago