ரூ.12 லட்சம் கோடி கடனை மீட்க வியூகம்!

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வங்கி வட்டார தகவல்களின்படி, கடன் மீட்பு தீர்ப்பாயங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றில் குறிப்பாக 1.5 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகளின் வாராக் கடன் நிலுவை மட்டும் ரூ.12 லட்சம் கோடி ஆகும்.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. அப்போது, லோக் அதாலத் போன்று தீர்வு தளங்களை பயன்படுத்துமாறு வங்கிகளை நிதி அமைச்சகம் கேட்டுக் கொண்டது.

மேலும், ரூ.12 லட்சம் கோடி வாராக் கடன் நிலுவை தொடர்பான 1.5 லட்சம் வழக்குகளில் தீர்வு காண்பதற்கு ஒரே ஒருமுறை வாய்ப்பளிக்கும் வகையில் பொதுத் துறை வங்கிகள் புதிய வியூகங்களை வகுக்க வேண்டும் என்று நிதியமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE