மும்பை: பேங்க் பேலன்ஸில் மட்டுமல்ல, பெரிய மனது காட்டுவதிலும் பணக்கார மனிதர் என்ற பாராட்டுக்களை பெற்றுவருகிறார் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி. இப்படி அம்பானி புகழப்படுவதற்கு காரணம் அம்பானி தனது ஊழியர் ஒருவருக்கு கிஃப்டாக கட்டிக்கொடுத்துள்ள 1500 கோடி மதிப்பிலான 22 மாடி வீடு.
இந்த காஸ்ட்லி கிஃப்ட்டை பெற்ற நபர் அம்பானியின் நெருங்கிய நண்பரும், வலதுகரமாக அறியப்படுபவருமான மனோஜ் மோடி. அம்பானி குடும்ப உறுப்பினர்களுக்கு நெருக்கமான இந்த மனோஜ் மோடி, முகேஷ் அம்பானியுடன் சேர்ந்து மும்பை பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் டெக்னாலஜி படித்தவர்.
படித்து முடித்ததில் இருந்து ரிலையன்ஸ் குழுமத்தில் ஒரு அங்கமாக இருந்து வருகிறார். சொல்லப்போனால், முகேஷின் தந்தை திருபாய் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தை நடத்திய சமயத்திலேயே அங்கு பணிக்குச் சேர்ந்த மனோஜ் மோடி, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக அம்பானி குடும்பத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
இப்போது மூன்றாம் தலைமுறை அம்பானிகளான முகேஷின் வாரிசுகள் ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானிக்கு வழிகாட்டியாகவும் இருந்து ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீட்டைல் நிறுவனத்தின் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். ரிலையன்ஸ் சமீப காலமாக செய்துவரும் பல பில்லியன் டாலர் மதிப்பிலான அனைத்து ஒப்பந்தங்களின் வெற்றிக்கு மூளையாக இருப்பவரும் மனோஜ் மோடியே.
இதற்கு பிரதிபலனாகவே தற்போது 1,500 கோடி மதிப்பிலான 22 மாடி பங்களாவை கிஃப்ட்டாக கட்டிகொடுத்திருக்கிறார் முகேஷ் அம்பானி. மும்பையின் எதோ ஒரு மூலையில் இல்லாமல், தான் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள மும்பையின் பிரீமியம் பகுதி என அழைக்கப்படுகின்ற நேபியன் கடல் சாலையில் இந்த பங்களாவை முகேஷ் கட்டிக்கொடுத்துள்ளார். இதே பகுதியில்தான் ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் உள்ளிட்ட பெரும் தலைகள் வசிக்கின்றனர்.
நேபியன் கடல் சாலையில் உள்ள குடியிருப்புகள் பொதுவாக ஒரு சதுர அடிக்கு 45,100 முதல் 70,600 ரூபாய் வரை விலை போகிறது. தற்போது மனோஜ் மோடிக்கு அம்பானி கட்டிக்கொடுத்துள்ள ரூ.1500 கோடி மதிப்புள்ள வீட்டின் மொத்த பரப்பளவு 1.7 லட்சம் சதுர அடி. 22 மாடிகள் கொண்ட அந்த வீட்டில் ஒவ்வொரு தளமும் 8,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது.
`கிறிஸ்டென்ட் விருந்தாவன்' எனப் பெயரிப்பட்டுள்ள இந்த வீடு மனோஜ் மோடியின் குடும்பத்தினர் விருப்பத்துக்குத் தக்கபடி வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் முதல் ஏழு தளங்கள் கார் பார்க்கிங்கிற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 14வது தளத்தில் மனோஜ் மோடியின் அலுவலகமும், 15வது தளத்தில் மருத்துவமனை அமைப்பில் சுகாதார தளம் ஒன்றும் இடம்பெற்றுள்ளன.
இது தவிர விளையாடுவதற்கு வசதி, ஸ்பா, பார்ட்டி அறைகள், நீச்சல் குளம், தியேட்டர்கள் சகல வசதிகளும் அடக்கம். 175 வீட்டு பணியாளர்கள், இஸ்ரேல் கம்பெனி ஒன்றின் பாதுகாப்பு என இந்த வீடு குறித்த அப்டேட்களே இப்போது வைரலாக பரவிவருகிறது. முன்னதாக, இந்த வீட்டுக்கு குடிபெயர்ந்த பிறகு மனோஜ் மோடி, மும்பையில் இதற்கு முன் தான் தங்கியிருந்த இரண்டு அடுக்குமாடி குடியிருப்பை ரூ.41.5 கோடிக்கு விற்றுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago