புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,934 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. முந்தைய நாளில் தொற்று எண்ணிக்கை 7,178 என்றளவில் இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியாவில் புதிதாக 6,934 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 63,380 ஆக உள்ளது. இது 0.14 சதவீதமாகும். தினசரி பாதிப்பு விகிதம் 3.52% வாராந்திர பாதிப்பு விகிதம் 5.42% என்றளவில் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் 24 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,31,369 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 9,213 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,43,11,078 பேர். தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.67 சதவீதம்.
» தெலங்கானா | போலீஸாரை கன்னத்தில் அறைந்த ஒய்.எஸ்.ஷர்மிளாவுக்கு 14 நாட்கள் சிறை
» ”எனக்குப் பதவி, அதிகாரத்துக்கான ஆசையில்லை; நாட்டின் நலனுக்காக பாடுபடுகிறேன்” - நிதிஷ் குமார்
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.21 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.87 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும். கடந்த 24 மணி நேரத்தில் 4,943 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago