தெலங்கானா | போலீஸாரை கன்னத்தில் அறைந்த ஒய்.எஸ்.ஷர்மிளாவுக்கு 14 நாட்கள் சிறை

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: போலீஸாரை கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஒய்.எஸ்.ஷர்மிளாவுக்கு 14 நாட்கள் காவல் அளிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TSPSC தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் அம்மாநிலத்தில் பரவலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால், மூன்று தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகளும், ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஷர்மிளா, இதே விவகாரத்தை முன்னிறுத்தி பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். கடந்த மாதம், ஹைதராபாத்தில் இந்த பிரச்சனைக்காக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அவர் கைது செய்யப்பட்டார்.

இன்று இந்த வழக்கை விசாரிக்கும் விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் (SIT) அலுவலகத்திற்குச் செல்ல முற்பட்டார் ஷர்மிளா. அப்போது ஷர்மிளாவை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அதில் ஒரு போலீஸார் ஷர்மிளாவின் கார் டிரைவரை வழிமறித்து அவரை வெளியேற்றினார்.

வாகனம் நிறுத்தப்பட்ட உடனேயே, அந்த போலீஸ்காரர் பக்கம் நடந்து சென்ற ஷர்மிளா, அவரை அடித்து மிரட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன. பின்னர் அந்த அதிகாரிக்கும் திருமதி ஷர்மிளாவுக்கும் இடையே கோபமான வாக்குவாதம் ஏற்பட, மற்ற போலீஸார் அவரை அழைத்துச் செல்ல முயன்றனர். இதனால் காரில் இருந்து இறங்கி SIT அலுவலகம் நோக்கி நடந்த ஷர்மிளா அப்போதும் ஒரு பெண் போலீஸை அடிக்க முற்பட்டார்.

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸ், ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அவருக்கு 14 நாட்கள் சிறை அளிக்கப்பட்டுள்ளது.

ஷர்மிளாவை பார்ப்பதற்காக ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையம் வந்தார் அவரின் தயார் விஜயம்மா. அவரையும் போலீஸ் தடுத்த நிறுத்த, அவரும் பெண் போலீஸ் ஒருவரை கன்னத்தில் அறைந்தார். இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE