எதிரி நாட்டு ஏவுகணைகளை வானில் இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: எதிரி நாட்டு ஏவுகணைகளை, நடுவானில் இடைமறித்து தாக்கும் ஏவுகணைகளை இந்தியா ஏற்கெனவே வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இவைகள் தரை இலக்குகளில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள். அதுபோல் போர்கப்பல்களில் இருந்து எதிரி நாட்டு ஏவுகணைகளை வானில் இடைமறித்து தாக்கும் ஏவுகணையை டிஆர்டிஓ உருவாக்கியது.

இந்த ஏவுகணை ஒடிசா கடற்கரையில் நேற்று முதல் முறையாக சோதனை செய்யப்பட்டது. போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை, நடுவானில் இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. இந்த வகை ஏவுகணைகள் ஒரு சில வளர்ந்த நாடுகளின் கடற்படையில் மட்டுமே உள்ளன. தற்போது அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது என ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வானில் இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதற்காக, டிஆர்டிஓ மற்றும் இந்திய கடற்படைக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்ட குழுவினருக்கு டிஆர்டிஓ தலைவர் சமிர் வி. காமத் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘‘மிகவும் சிக்கலான தொழில்நுட்பம் வாய்ந்த, வானில் இடைமறித்து தாக்கும் ஏவுகணை தயாரிப்பில் நாடு தற்சார்பை அடைந்துள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE