டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேபாள அதிபருக்கு சிகிச்சை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நேபாள அதிபர் ராமசந்திர பவுடேலுக்கு (78) நேற்று முன்தினம் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக காத்மாண்டுவில் உள்ள டியு டீச்சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் குழு நடத்திய முதல்கட்ட பரிசோதனையில் அவருக்கு இருதய பகுதியில் தொற்று இருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து, மேல் கிசிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர் குழு பரிந்துரை செய்தது. இதனிடையே, நேபாள பிரதமர், துணை பிரதமர் ஆகியோர் அதிபர் பவுடேலை நேரடியாக சந்தித்து அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து நேபாளத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கிசிச்சைக்காக பவுடேல் அழைத்து வரப்பட்டார். நேபாள அதிபர் டெல்லி எய்ம்ஸில் கிசிச்சைக்காக அனுமதிக்கப்படுவது கடந்த ஒரு மாதத்தில் இது இரண்டாவது முறையாகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE