போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் இன்று (ஏப்.19) காலையில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது. இதில் இரு ரயில் ஓட்டுநர்கள் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம், ஷாதோல் மாவட்டத்தில் உள்ள சிங்கூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்றின் மீது, அதே வழியில் வந்த மற்றொரு சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயில் எஞ்சின்கள் தடம்புரண்டு தீப்பிடித்தன. இன்று காலை 6.30 மணியளவில் நடந்த இந்த விபத்தில் இரு சரக்கு ரயில்களின் ஓட்டுநர்கள், இரண்டு ரயில்வே ஊழியர்கள் உட்பட நான்கு பேர் காயமைடைந்தனர். சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதாகவும், மீட்பு பணிகள் விரைவாக நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்த மேலும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
இந்த விபத்தினால் பிலாஷ்புர் - கட்னி இடையே ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சில ரயில்கள் வேறு மார்க்கமாக திருப்பி விடப்பட்டுள்ளன, சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகள்
இந்தியா
43 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago