நரோடா காம் கலவரத்தின்போது முன்னாள் மத்திய அமைச்சர் மாயா கொட்னானி குஜராத் சட்டப்பேரவையில் இருந்தார் என்று குஜராத் சிறப்பு நீதிமன்றத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா சாட்சியம் அளித்துள்ளார்.
இதுகுறித்து நீதிமன்றத்தில் பேசிய அமித் ஷா, ''நரோடா காம் கலவரம் நடைபெற்றபோது முன்னாள் மத்திய அமைச்சர் மாயா கொட்னானி அங்கே இல்லை. அன்று காலை 8.30 மணிக்கு அவர் குஜராத் சட்டப்பேரவையில் இருந்தார்'' என்று தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோத்ரா ரயில் எரிக்கப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து நடைபெற்ற பந்த் மற்றும் போராட்டத்தின்போது பெரும் கலவரம் வெடித்தது. இதன் ஒரு பகுதியாக அகமதாபாத் நகரின் நரோடா பாட்டியா என்ற இடத்தில் நடந்த கலவரத்தில் 97 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் மாயா கொட்னானிக்கு 28 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதுபோல நரோடா காம் என்ற இடத்தில் நடந்த கலவரத்தில் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரித்து வருகிறது. இது தொடர்பாக எஸ்ஐடி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 82 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள மாயா கொட்னானி, தனக்கு இந்த கலவரத்தில் தொடர்பில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு அமித் ஷாவின் சாட்சியம் உதவும் என்றும் கூறியிருந்தார்.
இதன் அடிப்படையில், மாயாவுக்கு ஆதரவாக சாட்சியம் அளிக்க வரும் 18-ம் தேதி ஆஜராகி மாயாவுக்கு ஆதரவாக சாட்சியம் அளிக்குமாறு அமித் ஷாவுக்கு நீதிபதி பி.பி.தேசாய் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று குஜராத் சிறப்பு நீதிமன்றம் வந்த அமித் ஷா நரோடா கலவரத்தின்போது மாயா கொட்னானி சட்டப்பேரவையில் இருந்தார் என்று சாட்சியம் அளித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago