பிஹாரில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

பாட்னா: பிஹார் மாநிலத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் சிலர் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்று வருகின்றனர். இதனால் பலர் உயிரிழக்கின்றனர்.

இந்நிலையில், கிழக்கு சம்பரன் மாவட்டம் துர்குலியா மற்றும் பஹர்பூர் கிராமத்தை சேர்ந்த சிலர் 3 நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். இதில் 22 பேர் உயிரிழந் துள்ளனர். இந்நிலையில் உயிரி ழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று அறிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர் களிடம் முதல்வர் நிதிஷ் கூறியதாவது: இது ஒரு சோகமான சம்பவமாகும். கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த அனைவருமே மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எனவே அவர்களது குடும்பத்தாருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதியை, முதல்வர் நிவாரண நிதியிலிருந்து வழங்க முடிவு செய்துள்ளோம்.

இதற்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்துக்கும் இந்த நிவாரண நிதியை வழங்க முடிவு செய்துள் ளோம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். இவ்வாறு முதல்வர் நிதிஷ் குமார் கூறினார்.

கடந்த 2021-ம் ஆண்டு முதல் கள்ளச்சாராயத்தால் 155 பேர் பிஹார் மாநிலத்தில் உயிரிழந்துள் ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE