கொல்கத்தா: மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடத்தி வருகிறது. மம்தா திருமணம் செய்து கொள்ளவில்லை. இதன் காரணமாக அவரது மூத்த அண்ணன் அமித் பானர்ஜியின் மகன் அபிஷேக் பானர்ஜி மம்தாவின் அரசியல் வாரிசாக கருதப்படுகிறார். தற்போது அவர் திரிணமூல் காங்கிரஸின் பொதுச் செயலாளராக பதவி வகிக்கிறார்.
மேற்குவங்க ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் அபிஷேக் பானர்ஜிக்கு தொடர்பிருப்பதாக சிபிஐ, அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளன. இந்த ஊழல் வழக்கில் தேவைப்பட்டால் அவரிடம் விசாரணை நடத்தலாம் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடந்த 13-ம் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து அபிஷேக் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்த சூழலில் ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அபிஷேக் பானர்ஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
மேற்குவங்கத்தில் இருந்து அண்டை நாடான வங்கதேசத்துக்கு மாடுகள் கடத்தப்படுகின்றன. அந்த வகையில் மாடுகள் கடத்தல் மூலம் ஓராண்டில் ரூ.9,000 கோடி வரை வியாபாரம் நடைபெறுகிறது. இதுதொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் ஆளும் திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கிலும் அபிஷேக் பானர்ஜிக்கு சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
» தன்பாலினத்தவர் திருமணம் என்பது நகர்ப்புற மேல்தட்டு பார்வை - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
» தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனம் தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதிகள் விலகல்
மம்தா கண்டனம்: மேற்கு வங்கம் மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் அண்மையில் பாஜக சார்பில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ‘‘வரும் மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் 35 இடங்களில் பாஜக வெற்றி பெற்றால் போதும். மம்தா ஆட்சி 2025-ம் ஆண்டுக்கு மேல் நிலைக்காது’’ என்று பேசினார்.
இதுகுறித்து மம்தா கூறும்போது, ‘‘ஜனநாயகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை கவிழ்ப்போம் என்று உள்துறை அமைச்சர் ஒருவர் எப்படி பேசலாம்? நாட்டின் அரசியலமைப்பு சட்டம் மாறிவிட்டதா?’’ என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago