மும்பை: நவி மும்பையின் பரபரப்பான பாம் பீச் சாலையில் போதையில் காரை ஓட்டி வந்த 23 வயது இளைஞர் சிக்னலை மதிக்காமல் சென்றதுடன் அங்கிருந்த போக்குவரத்து காவலரையும் காரில் இடித்து 18 கி.மீ தூரத்துக்கு இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆதித்ய பென்டே என்பவர் பாம் பீச் சாலையில் காரை வேகமாக ஓட்டி வந்து சிக்னலை மதிக்காமல் சென்றுள்ளார். அப்போது அவரை தடுத்து நிறுத்த முயன்ற போக்குவரத்து காவலர் சித்தேஷ்வர் மாலியை தனது காரின் பேனட்டில் இடித்து தள்ளி 18 கி.மீ. தூரத்துக்கு அவரை இழுத்துச் சென்றுள்ளார்.
இதையடுத்து தகவலறிந்த காவல் துறையினர் கவன் பாட்டாவில் சாலையின் நடுவே கண்டெயினரை நிறுத்தி காரை வழிமறித்துள்ளனர். காரில் இருந்த ஆதித்யா போதையில் இருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு கொலை முயற்சி, போதையில் ஆபத்தான வகையில் காரை இயக்கி பொது வெளியில் ஆபத்தை விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
2 days ago