திருமலை திருப்பதி தேவஸ்தானம் சமீபத்தில் தொடங்கியுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா தமிழ் பக்தி தொலைக்காட்சி மூலம் இந்த பிரம்மோற்சவ விழாவில் தமிழகம், புதுவையைச் சேர்ந்த நடன, இசை கலைஞர்களை ஊக்குவித்து வருகின்றனர்.
திருப்பதி தேவஸ்தானத்தினர் உலகம் முழுவதிலும் வசிக்கும் தமிழ் பக்தர்களுக்காக சமீபத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா தமிழ் பக்தி தொலைக்காட்சி சேனலை தொடங்கினர். இதற்கு தமிழ் பக்தர்களுக்கிடையே சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதால், தற்போது நடைபெற்று வரும் பிரம்மோற்சவ சிறப்பு நிகழ்ச்சிகளில் தமிழகம், புதுவை போன்ற மாநிலங்களைச் சேர்ந்த நடன, இசை கலைஞர்கள் மூலம் பல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ‘தி இந்து’ விடம் தொலைக்காட்சி சேனலின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ கூறியதாவது:
ஸ்ரீவெங்கடேஸ்வரா தமிழ் பக்தி தொலைக்காட்சி தொடங்கப்பட்ட பின் நடக்கும் முதல் பிரம்மோற்சவம் இது. தமிழகம் மற்றும் புதுவையில் வசிக்கும் பல்வேறு கலைஞர்களின் திறமைகளை வெளியே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். கடந்த 23-ம் தேதி முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெறும் பிரம்மோற்சவத்தில் 9 நாட்களுக்கும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. இதில் வேளுக்குடி கிருஷ்ணனின் வாகன வைபவம், ரேவதி சங்கரின் ‘புண்ணியமான புரட்டாசி’ சொற்பொழிவுகள் பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், சிறுவர்கள் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றும் ‘பாலர் உகந்த பகவான்’, சிறுவர்கள் பங்கேற்கும் நடன நிகழ்ச்சியான ‘அபிநய அவதாரம்’, ஆன்மீக கிராமிய நடன நிகழ்ச்சியான ‘நாட்டிய நிவேதனம்’ மற்றும் ‘நாமம் திவ்ய நாமம்’ போன்றவை நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. தமிழக கலைஞர்களை ஊக்குவிக்கவே இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சிகளுக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், பிரம்மோற்சவ நாட்களில் தொடர்ந்து 9 நாட்களும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் வாகன சேவைகள் நேரலை செய்யப்பட்டு வருகிறது.
இது தவிர, திருமலையின் சிறப்புகள் எனும் பெயரில் அலிபிரி மலைப்பாதை முதல் ஆனந்த நிலையம் வரை உள்ள அனைத்து சிறப்புகளும் ஒளிப்பரப்பாகிறது. திருமலையில் உள்ள புண்ணிய தீர்த்தங்கள், ஆழ்வார்களின் பெருமைகள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இவ்வாறு ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ கூறினார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சி சேனலில் தலைமை செயல் நிர்வாக அதிகாரி (சி.இ.ஓ) நரசிம்ம ராவ் கூறும்போது, ‘‘சமீபத்தில் நடைபெற்ற காவேரி புஷ்கரம் குறித்த சிறப்பு நிகழ்ச்சிகளையும் தமிழ் பக்தி சேனலில் நேரலையாக ஒளிப்பரப்பினோம். மேட்டூர் முதல் பூம்புகார் வரை உள்ள அனைத்து தலங்களிலும் காவேரி புஷ்கர நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாயின. இதற்கும் தமிழக பக்தர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago