மத்திய பிரதேசத்தின் நர்மதாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஷப்னம் ஜகான் அன்சாரி (47). விவாகரத்து பெற்ற அவர், மகாராஷ்டிர தலைநகர் மும்பையில்உள்ள பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறார்.
மகாராஷ்டிர மாநிலம் ஜல் கோன் பகுதியை சேர்ந்த தனது தங்கை கெய்சர்ஜகானின் 3 வயது மகள் அயத் பாத்திமாவை தத்தெடுக்க, ஷப்னம் ஜகான் முடிவு செய்தார். குழந்தையை தத்தெடுக்க சம்பந்தப்பட்ட அரசுஅதிகாரிகளிடம் அவர் விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பூஷாவல் மாவட்ட நீதிமன்றத்தில் ஷப்னம் ஜகான் அன்சாரி மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஷப்னத்தின் மனுவை தள்ளுபடி செய்தார்.
‘‘குழந்தையை தத்தெடுக்க விரும்பும் ஷப்னம் ஜகான் அன்சாரி விவாகரத்து பெற்று தனியாக வாழ்கிறார். ஆசிரியையாக பணியாற்றுகிறார். வேலைக்கு செல்லும் பெண்ணால், குழந்தையை முறையாக பராமரிக்க முடியாது’’ என்று கூறி நீதிபதி தீர்ப்பளித்தார்.
» டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் - மதுபான கொள்கை ஊழல் வழக்கில் நாளை ஆஜராகிறார்
» ராணுவ நிலம் மோசடியாக விற்பனை - ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிகாரி உட்பட 7 பேர் கைது
இந்த தீர்ப்பை எதிர்த்து ஷப்னம் ஜகான் அன்சாரி மற்றும் குழந்தையை தத்து கொடுக்க முன்வந்த தம்பதியர் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதி கவுரி கோட்சே விசாரித்து கடந்த 11-ம் தேதி தீர்ப்பளித்தார். அதில் கூறியிருப்பதாவது:
விவாகரத்து பெற்று தனியாக வாழும் பெண்ணால் குழந்தையை வளர்க்க முடியாது. வேலைக்கு செல்லும் பெண்ணால் குழந்தையை முறையாகப் பரா மரிக்க முடியாது என்று கூறுவது இடைக்கால பழைமைவாத மன நிலையை வெளிப்படுத்து கிறது. வேலைக்கு செல்லும் பெண், குழந்தையைத் தத்தெடுக்க உரிமை இருக்கிறது. பூஷாவல் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது.
மனுதாரர் ஷப்னம் ஜகான் அன்சாரியே குழந்தை அயத் பாத்திமாவின் வளர்ப்பு தாய்என்று சட்டப்பூர்வமாக அறிவிக் கப்படுகிறது. இதற்கேற்ப பூஷா வல் நகராட்சி நிர்வாகம், குழந்தை அயத் பாத்திமாவின் பிறப்பு சான்றிதழில் திருத்தம் செய்து வழங்க வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago