உ.பி. வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அத்திக் அகமதுவின் மகன், கூட்டாளி என்கவுன்ட்டரில் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த, முன்னாள் எம்எல்ஏ அத்திக் அகமதுவின் மகன் ஆசாத் மற்றும் அவனது கூட்டாளி குலாம் ஆகியோர் போலீஸாரின் என்கவுன்ட்டரில் உயிரிழந்தனர்.

உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜூ பால் கடந்த 2005-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த வழக்கறிஞர் உமேஷ் பால் கடந்த 2007-ம் ஆண்டு கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார். பிப்ரவரி 24-ம் தேதி உமேஷ் பால் படுகொலை செய்யப்பட்டார்.

உமேஷ் பால் கடத்தல் வழக்கில் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்எல்ஏவும் பிரபல ரவுடியுமான அத்திக் அகமதுவுக்கு பிரயாக்ராஜ் நீதிமன்றத்தில் சமீபத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதே வழக்கில் அத்திக் அகமதுவின் மகன் ஆசாத் மற்றும் குலாம் ஆகியோர் தேடப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், இவர்கள் ஜான்சியில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஆசாத் மற்றும் அவரது கூட்டாளி குலாம் ஆகியோர் உயிரிழந்தனர். ஆசாத் மற்றும் குலாமிடமிருந்து நவீன வெளிநாட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

உமேஷ் பால் கடத்தல் வழக்கின் தீர்ப்புக்காக அத்திக் அகமது குஜராத் சிறையிலிருந்து உ.பி.பிரயாக்ராஜ் சிறைக்கு சமீபத்தில் மாற்றப்பட்டார். தன்னை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்ல திட்டமிட்டிருப்பதாக, உச்ச நீதிமன்றத்தில் அத்திக் அகமது சார்பில் மனு செய்யப்பட்டிருந்தது. இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் உமேஷ் பால் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அத்திக் அகமதுவின் மகன் ஆசாத் மற்றும் அவரது கூட்டாளிகுலாம் ஆகியோர் போலீஸாரின் என்கவுன்ட்டரில் உயிரிழந்துள்ளனர்.

5 நாள் போலீஸ் காவல்

உமேஷ் பால் கொலை வழக்கு தொடர்பாக அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், இருவரும் நேற்று காலை பிரயாக்ராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கவும், இவற்றில் 5 நாட்கள் போலீஸ் காவலில் அனுப்பவும் பிரயாக்ராஜ் நீதிமன்றம் உத்தரவிட்டது. மகன் ஆசாத் சுட்டுக் கொல்லப்பட்ட அதே நாளில் அத்திக் அகமது போலீஸ் காவலில் அனுப்பப்பட்டுள்ளார். இவர் மீது கொலை, கடத்தல் உட்பட 101 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.11,684 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

மேலும்