பிஹாரில் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து 34 சிறுவர்கள் தப்பியோட்டம்

By அமர்நாத் திவாரி

பிஹார் மாநிலத்தின் மூங்கர் மாவட்டத்தில் சிறார் சீர்திருத்தப் பள்ளியில்  இருந்த 34 சிறார்கள் ஞாயிற்றுக்கிழமை தப்பியோடினர். இவர்களில் 11 பேர் மீண்டும் திரும்பியுள்ளனர்.

சீர்திருத்தப் பள்ளியின் வாயிற் கதவில் உள்ள இரும்பு கிரில்லை உடைத்து அவர்கள் வெளியேறியுள்ளனர்.

இதுகுறித்து 'தி இந்து'விடம் (ஆங்கிலம்) பேசிய மூங்கர் காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷுஷ் பார்தி, ''தப்பியோடிய 34 கைதிகளில் 11 பேர் திரும்பி வந்துவிட்டனர். மீதமுள்ளவர்கள் குறித்து அருகிலுள்ள 6 மாவட்டங்களுக்குத் தகவல் அளித்திருக்கிறோம்.

இன்று மாலைக்குள் இல்லத்துக்குள் திரும்பி வரும் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நம்புகிறோம். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சீர்திருத்தப் பள்ளியில் இருந்து தப்பியோடிய சிறார்களின் பெற்றோருக்கு தகவல் கூறப்பட்டுள்ளது'' என்றார்.

மூங்கர் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் சுமார் 85 சிறார்கள் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்