‘பதுகம்மா’ பண்டிகைக்கு தெலங்கானாவில் 1 கோடி இலவச சேலை விநியோகம்: தரம் குறைவு என பெண்கள் ஆர்ப்பாட்டம்

By என்.மகேஷ் குமார்

‘பதுகம்மா’ பண்டிகைக்காக தெலங்கானா அரசு சார்பில் ஏழை பெண்களுக்கு 1.6 கோடி இலவச புடவைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்த புடவைகள் தரம் குறைந்ததாக உள்ளது என்று சில இடங்களில் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி பண்டிகை காலத்தில், தசரா விடுமுறையில் தெலங்கானா மாநிலத்தில் ‘பதுகம்மா’ எனும் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது பிறந்த வீட்டிற்கு வரும் பெண்களுக்கான பண்டிகை என கூறப்படுகிறது. இந்த பண்டிகையின்போது, திருமணமாகி சென்ற பெண்கள் தங்களது தாய் வீட்டிற்கு வருவார்கள். அவர்களுக்கு புடவை போன்ற சீர்வரிசைகள் வழங்கப்படும். இதனையொட்டி, தெலங்கானா அரசு சார்பில் பெண்களுக்கு இலவச புடவைகள் வழங்க முதல்வர் கே. சந்திரசேகர ராவ் முடிவு செய்தார். அதன்படி மாநிலத்தில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு 1.6 கோடி புடவைகள் வழங்க திட்டமிடப்பட்டது. இந்த புடவைகள் கடந்த திங்கட்கிழமை முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு புடவையும் ரூ. 500 மதிப்பு மிக்கது என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், புடவைகளை வாங்க பெண்கள் காலை முதலே விநியோக மையங்கள் முன் குவிந்திருந்தனர். ஆனால் சில இடங்களில் புடவைகள் மிகவும் தரம் குறைந்ததாக இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெண்கள் அந்த புடவைகளை கிழித்தெறிந்து, சாலையில் போட்டு எரித்து தங்களது எதிர்ப்பை காட்டினர். மேலும் சில இடங்களில் பெண்கள் புடவைகளுடன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால், எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே பொய் பிரச்சாரம் செய்வதாக ஆளும் டிஆர்எஸ் கட்சி கூறியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்