தொழிலாளர் சட்ட திருத்தத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் எதிர்ப்பு

நீண்ட போராட்டங்களின் பலனாக உருவான தொழிலாளர் சட்டங்களில் மத்திய அரசு திருத்தம் எதுவும் செய்யக்கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது.

இது பற்றி கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினரான பிருந்தா காரத் நிருபர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் கொண்டுவரும் முயற் சியை மத்திய அரசு தொடர்ந்தால் நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும். உழைக்கும் வர்க்கத் தின் நீண்ட நெடிய போராட்டத்தின் பலனாகவே தொழிலாளர் சட் டங்கள் உருவாகின. தொழிலதிபர் கள் தாமாக முன் வந்து சலுகை களை செய்யவில்லை.

மக்களவையில் பெரும் பான்மை பலம் இருப்பதால் தொழிலாளர் சட்டங்களை மாற்ற நினைக்கிறது மத்திய அரசு. இதை தடுத்து நிறுத்திட உழைக்கும் வர்க்கம் போராட்டங்களை நடத்தும்.

ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டமும் நிறுத்தப்படும் என நாங்கள் அஞ்சுகிறோம். திட்டங் களுக்கு விரைவாக ஒப்புதல் தருவது என்ற போர்வையில் வன உரிமைகளும் ஆபத்துக்குள்ளாகி உள்ளன என்றார் பிருந்தா காரத்.

பல்வேறு தொழிலாளர் சட்டங் களில் திருத்தம் கொண்டுவர அரசு தீவிரமாக பரிசீலனை செய்வ தாக மாநிலங்களவையில் புதன் கிழமை தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்புத்துறை அமைச்சர் விஷ்ணு தேவ் சாய் அறிவித்தார்.

அது பற்றி குறிப்பிட்டு கேட்ட தற்கு பிருந்தா காரத் மேற்சொன்ன கருத்தை வெளியிட்டார்.

மாணவி பலாத்கார சம்பவத்துக்கு கண்டனம்

பெங்களூரில் உள்ள பள்ளிக் கூடம் ஒன்றில் 6 வயது மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் பிருந்தா காரத்.

இந்த சம்பவம் படுபயங்கர மானது, கண்டிக்கத்தக்கது. பெண் களுக்கான பாதுகாப்பு பற்றிய கவலையை இது அதி கரிக்கச் செய்துள்ளது. கிரிமினல் களுக்கு அரசியல்வாதிகள் பாது காப்பாக இருப்பதால் இது போன்ற பயங்கர குற்றச் செயல் கள் அதிகரிக்கின்றன. .

சிங்காலுக்கு கண்டனம்

சிறுபான்மை இனத்தவருக்கு பத்திரிகை ஒன்றின் மூலமாக எச்சரிக்கை விடுத்த விஎச்பி தலைவர் அசோக் சிங்கால் மீது வழக்குப் பதிவு செய்யவேண்டும்.

பெரும்பான்மை பெற்று ஆட்சி யில் இருப்பதை வைத்து எப்படி சிறுபான்மை இனத்தவருக்கு மிரட்டல் விடுக்க முடியும் என பேட்டியின்போது பிருந்தா காரத் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE