வாய் புற்றுநோயால் 6 மணி நேரத்துக்கு ஒரு இந்தியர் பலி

By செய்திப்பிரிவு

வாய் புற்றுநோயால் 6 மணி நேரத்துக்கு ஒரு இந்தியர் பலியாகி வருவதாக இந்திய பல் மருத்துவ கூட்டமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பைச் சேர்ந்த டாக்டர் அசோக் டோப்ளே மும்பையில் கூறியதாவது:

இந்தியாவில் புகையிலைப் பழக்கத்தால் வாய் புற்றுநோய் அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த வகை நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங் களில் இந்நோயின் பாதிப்பு அதிகம் உள்ளது. இவை தவிர மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், குஜராத், தமிழகத்திலும் பாதிப்பு உள்ளது.

வாய் புற்றுநோய் காரணமாக இந்தியாவில் ஒவ்வொரு 6 மணி நேரத்துக்கும் ஒருவர் உயிரிழக்கிறார். இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு புகையிலைப் பொருள்களுக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE