சண்டிகர்: பஞ்சாபில் மே 2-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை காலை 7.30 மணி முதல் மதியம் 2 மணி வரை அரசு அலுவலகங்கள் இயங்கும் என முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட வீடியோவில் கூறி யிருப்பதாவது: பஞ்சாபில் மின் நுகர்வு மதியம் 1.30 மணிக்கு மேல் அதிகரிக்கத் தொடங்குகிறது. அரசு அலுவலங்களை மதியம் 2 மணிக்கு மூடினால், மின் நுகர்வு அதிகரிப்பதை 300 முதல் 350 மெகாவாட் வரை குறைக்க முடியும். இதுகுறித்து அரசு ஊழியர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பஞ்சாப் அரசு அலுவலகங்கள் தற்போது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுகிறது.
இந்த பணி நேரத்தை மே 2-ம் தேதி முதல் காலை 7.30 மணி முதல் மதியம் 2 மணி வரை மாற்ற பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது. இந்த மாற்றம் ஜூலை 15-ம் தேதி வரை அமலில் இருக்கும். அரசு அலுவலகங்களில் செய்யப்படும் இந்த பணி நேர மாற்றத்தால், கோடை காலத்தில் மின் தேவை அதிகரிப்பை குறைக்க முடியும். நானும் எனது அலுவலகத்துக்கு காலை 7.30 மணிக்கு செல்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago