ராகுல் தகுதியிழப்பு விவகாரம் | நாடாளுமன்ற அமளியில் ஈடுபட்ட கட்சிகளை நாடு மன்னிக்காது - அமித் ஷா பேச்சு

By செய்திப்பிரிவு

கவுஷாம்பி: உத்தரபிரதேச மாநிலம் கவுஷாம் பியில் நேற்று நடைபெற்ற கவுஷாம்பி மகோத்சவத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்தார்.

பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியில் நாடு வளம் பெற்று வருகிறது. 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலிலும் பிரதமராக மோடியை மக்கள் தேர்வு செய்யவேண்டும்.

அண்மையில் சிறை தண்டனை பெற்றதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதியிழப்பு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தி நாடாளுமன்றத்தையே எதிர்க்கட்சிகள் முடக்கிவிட்டன. இதை நாடு மன்னிக்காது.

தொடர்ந்து நாடு வளர்ச்சி யுறவும், உலக அரங்கில் முன் னேறவும் வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்கவேண்டும். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE