அதானி, ராகுல் காந்தி விவகாரம்: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து முடக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தொழிலதிபர் அதானி, ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்றும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

நான்கு நாள் இடைவெளிக்குப் பின்னர் நாடாளுமன்றம் நேற்று காலையில் கூடியது. மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும் நீண்ட நாட்களாக உடல்நலமில்லாமல் இருந்து கடந்த மார்ச் 29-ம் தேதி காலமான பாஜக மக்களவை எம்.பி. கிரிஷ் பாபட்டுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பிற்பகல் 2 மணிக்கு அவை கூடியபோது அதானி, ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவையில் கூச்சல்-குழப்பம் நீடித்தது. இதைத் தொடர்ந்து அவை புதன்கிழமை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல் மாநிலங்களவை நேற்று காலையில் கூடியதும், அன்றைய அலுவல்களைப் பட்டியலிடுமாறு மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜெகதீப் தன்கர் அழைப்பு விடுத்தார்.

ஆனாலும் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். மேலும் பிரதமர் மோடி, அதானி பெயர்களைக் கூறி முழக்கங்கள் எழுப்பினர்.

இதேபோல் ராகுல் விவகாரத்தை எழுப்பி ஆளுங்கட்சி எம்.பி.க்கள் பேசினர். இதனால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு அவை கூடியபோது இதே நிலை தொடர்ந்தது. இதையடுத்து அவையை புதன்கிழமை காலை வரை ஒத்திவைக்கப்பதாக ஜெகதீப் தன்கர் அறிவித்தார்.

இந்தக் கூச்சல்-குழப்பத்துக்கு இடையே மாநிலங்களவையில் போட்டி (திருத்த) மசோதா 2023 குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது கட்டக்கூட்டத் தொடர் கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. கூட்டம் தொடங்கிய நாள் முதல் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி பேசியது தொடர்பாக அவர் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளுங்கட்சி உறுப்பினர்களும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் இந்த முறை நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியதிலிருந்து இரண்டு அவைகளிலும் எந்த முக்கியமான விவாதங்களும் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்