பெங்களூரு: செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த பயன்படும் ராக்கெட்டுகள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் புதிய ராக்கெட் தயாரிக்க செலவு அதிகரிக்கிறது. இதை கருத்தில் கொண்டு மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் புதிய ராக்கெட்டை கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.
பல முறை பயன்படுத்த முடியும்
இந்நிலையில் ஃபால்கன் வகை ராக்கெட்கள் கண்டுபிடிக்கப் பட்டன. இது செயற்கைக்கோள்கள் மட்டுமல்லாது மனிதர்களையும் விண்ணுக்குக் கொண்டு சென்றுமீண்டும் பத்திரமாக தரையிறங்கும் வகையில் வடி வமைக்கப் பட்டுள்ளது. இதனை பல முறை பயன்படுத்த முடியும்.
அந்த வரிசையில்தான் இந்தியாதற்போது இந்த வகை ராக்கெட்களை உருவாக்கி நேற்று வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து 220 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சித்ரதுர்கா மாவட்டம் செல்லக்கெரேவில் உள்ள ஏரோ நாட்டிக்கல் டெஸ்ட் ரேஞ்சில் இந்த சோதனையை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.
ஆனால் அமெரிக்காவின் எலான்மஸ்க்கின் ராக்கெட்டை விட அளவில் இது சிறியதாகும். அதேபோல இது ஒரு விமானம் போல ஓடுதளத்தில்தான் தரையிறங்கும். இந்தசோதனைக்காக நேற்று இஸ்ரோவின் ஆர்எல்வி ராக்கெட், ஹெலிகாப்டர் மூலம் 4.5 கிலோ மீட்டர்உயரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து கீழே செலுத்தப்பட்டது. அப்படி செலுத்தப்பட்ட இந்த ராக்கெட் குறிப்பிட்ட ஓடுதளத்தில் மிகச்சரியாக தரையிறங்கியுள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
உலகில் முதன் முறையாக, ஹெலிகாப்டர் மூலம் 4.5 கிலோ மீட்டர் உயரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, ஓடுபாதையில் தரையிறங்குவதற்காக ராக்கெட் விடுவிக்கப்பட்டது. அது மிகச்சரியாக தரையிறங்கியது. இதற்கு மறுபயன்பாட்டு ராக்கெட் அல்லதுமறுபயன்பாட்டுக்குரிய வகையிலான செலுத்து வாகனம் (ஆர்எல்வி) என்று பெயரிடப்பட் டுள்ளது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
வானிலிருந்து விடுவிக்கப் பட்ட பின்னர் ராக்கெட் செல்லக்கெரேயில் உள்ள ஏரோநாட்டிக் டெஸ்ட் ரேஞ்சில் (ஏடிஆர்) பத்திரமாகத் தரையிறங்கியது. இந்தியவிமானப்படை, ராணுவ விமானத்தகுதி மற்றும் சான்றிதழுக்கான மையம் (சிஇஎம்ஐஎல்ஏசி), ஏரோநாட்டிக்கல் டெவலப்மெண்ட் எஸ்டா பிளிஷ்மென்ட் (ஏடிஇ), வான்வழி விநியோக ஆராய்ச்சி மற்றும்மேம்பாட்டு நிறுவனம் (ஏடிஆர்டிஇ)ஆகியவை இணைந்து இந்த சோதனைக்கு உறுதுணை அளித்தன.
விண்ணுக்கு பல முறை அனுப்பும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மறுபயன்பாட்டு ராக்கெட்(ஆர்எல்வி) இஸ்ரோவின் சாதனையில் மேலும் ஒரு மைல்கல்என தெரியவந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago