புதுடெல்லி: கடந்த 2022-23 நிதியாண்டில் இந்தியா ₹15,920 கோடி மதிப்புள்ள ராணுவ வன்பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த நிதி ஆண்டு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அதில் நமது ராணுவ வன்பொருள் ஏற்றுமதி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங், அது குறித்த விவரங்களையும் பகிர்ந்துள்ளார். அதன்படி, கடந்த 2022-23 நிதி ஆண்டில் இந்தியாவின் வன்பொருள் ஏற்றுமதி ₹15,920 கோடி. 2020-21ல் ராணுவ வன்பொருள் ஏற்றுமதி ₹8,434 கோடியாகவும், 2019-20ல் ₹9,115 கோடியாகவும், 2018-19ல் ₹10,745 கோடியாகவும் இருந்துள்ளது. 2017-18ல் ₹4,682 கோடியாகவும், 2016-17ல் ₹1,521 கோடியாகவும் இது இருந்துள்ளது.
வரும் 2024-25 நிதி ஆண்டுக்குள் ராணுவ வன்பொருள் உற்பத்தி ₹1,75,000 கோடியாக இருக்க வேண்டும் என்றும், ஏற்றுமதி ₹35,000 கோடியாக இருக்க வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங், உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் உத்வேகம் அளிக்கும் தலைமையின் கீழ் வரும் காலங்களில் நமது ராணுவ வன்பொருள் ஏற்றுமதி மிகப் பெரிய அளவில் அதிகரிக்கும் என்றும் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
41 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
20 hours ago