கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பு: கருத்துக் கணிப்பில் தகவல்

By இரா.வினோத்


பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக ஏபிபி, சி ஓட்டர் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் மே 10-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதால் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஏபிபி, சி ஓட்டர் ஆகிய நிறுவனங்கள் இந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றிப் பெறும் என கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளன. அதில்,224 இடங்களைக் கொண்ட கர்நாடகாவில் காங்கிரஸுக்கு 115 முதல் 127 இடங்கள் கிடைக்கும். பாஜகவுக்கு 68 முதல் 80 இடங்களும், மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 23 முதல் 35 இடங்களும் மற்ற கட்சிகளுக்கு 2 இடங்கள் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

பசவராஜ் பொம்மையின் ஆட்சி மோசமாக இருப்பதாக 50.5 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர் என கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்