பலமாக உதைத்தால் மின்சாரம் பாயும் பெண்களின் பாதுகாப்புக்காக ‘மின் காலணி’ கண்டுபிடிப்பு

By என்.மகேஷ் குமார்

பெண்கள் ஆபத்து காலங்களில் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் வகையில் ‘மின் காலணி’யை ஹைதராபாத்தைச் சேர்ந்த 18 வயது மாணவர் கண்டுபிடித்துள்ளார்.

ஹைதராபாத்தில் பிளஸ் 2 படிக்கும் மாணவர் மந்தல சித்தார்த் (17) இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:

டெல்லியில் 5 ஆண்டுகளுக்கு முன் நிர்பயா மீது நடைபெற்ற பாலியல் பலாத்கார நிகழ்வு என்னைப் பெரிதும் பாதித்தது. இதனை தொடர்ந்து பெண்களின் பாதுகாப்பிற்காக ஏதாவது செய்ய வேண்டுமென ஆலோசித்தேன். எனது நண்பன் அகிலேஷ் துணையாக இருந்தான்.

‘பெப்பர் ஸ்பிரே’ அல்லது வேறு ஏதாவது எலக்ட்ரானிக் பொருட்களைத் தயாரித்தால் அதனை மறந்துவிட வாய்ப்பு உள்ளது. அதனால், காலணியை தயாரிக்க முடிவு செய்தோம். அதனை மின் காலணியாக தயாரித்தோம். ஆளானோம். தற்போது தயாரிக்கப்பட்டுள்ள இந்த மின் காலணி பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பானது. இந்த காலணியை அணிந்து செல்லும்போது, யாராவது அந்த பெண் மீது தாக்குதல் நடத்தினால், அவரை அந்தப் பெண் பலமாக உதைத்தால் போதும். உடனடியாக எதிராளி மீது மின்சாரம் பாயும். இதன்மூலம் எதிராளி நிலைதடுமாறி விடுவார்.

அந்த சமயத்தில் நாம் தப்பித்து விடலாம். அதே சமயத்தில் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கும் இதன் சமிக்ஞை சென்றுவிடும். மின் காலணியை அணிந்து கொண்டு நடக்கும்போதே இதில் உள்ள பேட்டரியில் மின்சாரம் சார்ஜ் ஆகி விடும். இதனை மின்சாரத்தில் ரீ சார்ஜும் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு மாணவர் சித்தார்த் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்