மும்பை: தேசிய கீதத்துக்கு அவமதிப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எந்தவிதக் கருணையும் காட்ட கூடாது என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மும்பையிலுள்ள கஃபே பரேட் மைதானத்திலுள்ள யஷ்வந்த் ராவ் சவாண் அரங்கத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் மம்தா பங்கேற்றார். நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது நாற்காலியில் அமர்ந்திருந்தார் மம்தா. ஆனால், தேசிய கீதத்தை் பாடினார். மேலும் பாடல் முடிவதற்கு முன்னதாக எழுந்து நின்ற நிலையில் 2 வரிகளைப் பாடினார். அதைத் தொடர்ந்து தேசிய கீதம் பாடி முடிக்கப்படுவதற்கு முன்னதாகவே நிகழ்ச்சி நடந்த அரங்கை விட்டு முதல்வர் மம்தா வெளியேறினார்.
இதைக் கண்டித்து சமூக செயற்பாட்டாளர் விவேகானந்த் குப்தா என்பவர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு செஷன்ஸ் நீதிமன்றம் மம்தாவுக்கு சம்மன் அனுப்பியது.
இந்த வழக்கு, சம்மன்களை ரத்து செய்ய கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மம்தா சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்ற தனி நீதிபதி அமித் போர்க்கர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி அமித் போர்க்கர் கூறியதாவது. இந்த வழக்கை செஷன்ஸ் நீதிமன்றமே விசாரிக்கலாம். இதில் உயர் நீதிமன்றம் தலையிடாது. மேலும் இந்த வழக்கில் மம்தாவுக்கு எந்தவிதக் கருணையையும் நீதிமன்றம் காட்டக்கூடாது. மம்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி அமித் போர்க்கர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago