மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் இன்றும் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் இன்றும் (மார்ச் 29) அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடர் தொடங்கியது முதல் தொடர் அமளி காரணமாக இரு அவைகளும் அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. வழக்கம்போல் நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்குக் கூடின. மக்களவையில் மூன்று மசோதாக்களையும், மாநிலங்களவையில் இரண்டு மசோதாக்களையும் அறிமுகப்படுத்தி அதன் மீது விவாதம் நடத்த அரசு தரப்பில் திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், மக்களவை கூடியதும் ராகுல் காந்தியின் எம்.பி., பதவி பறிப்பு மற்றும் அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரும் விவகாரம் ஆகியவற்றை வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், மக்களவையில் எந்த மசோதாவும் தாக்கல் செய்யப்படவில்லை. தொடர் அமளி காரணமாக மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல், மாநிலங்களவை கூடியதும் அங்கும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்