உமேஷ் பால் கடத்தல் வழக்கு: உ.பி கேங்ஸ்டர் அக்திக் அகமதுக்கு ஆயுள் தண்டனை

By செய்திப்பிரிவு

பிரயாக்ராஜ்: உமேஷ் பால் கடத்தல் வழக்கில் உத்தரப் பிரதேசத்தின் கேங்க்ஸ்டரும், முன்னாள் எம்எல்ஏவுமான அத்திக் அகமது உள்ளிட்ட 3 பேருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்து பிரயாக்ராஜ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அத்திக், தினேஷ் பாஸி, கான் சவுகத் ஆகிய மூன்ற குற்றவாளிகளுக்கும் தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அக்திக் அகமதுவின் சகோதரர் காலீது அசீம் உள்ளிட்ட 7 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

முன்னதாக அக்திக் அகமது வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கிலிருந்து அவருக்கு பாதுகாப்பு கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்ததோடு உயர் நீதிமன்றத்தையே அணுகுமாறு தெரிவித்துவிட்டது.

வழக்கு பின்னணி: கடந்த 2005-ம் ஆண்டில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராஜு பால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அத்திக் அகமது, அவரது தம்பி காலித் அசீம் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் முக்கிய சாட்சியான வழக்கறிஞர் உமேஷ் பால் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி கொல்லப்பட்டார். இவ்வழக்கில் அத்திக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சபர்மதி சிறையில் இருந்து அத்திக் அகமது நேற்று முன்தினம் அழைத்து வரப்பட்ட போது செய்தியாளர்களிடம் பேசிய அத்திக், ‘‘என்னை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்ல உ.பி. போலீஸார் திட்டமிட்டுள்ளனர்’’ என்று குற்றம் சாட்டினார். வடஇந்திய செய்தி சேனல்களில் அத்திக் அகமது குறித்த செய்தி பிரதான இடம் பிடித்திருக்கிறது. குஜராத்தில் இருந்து அவர் அழைத்து வரப்பட்டது தொலைக்காட்சி சேனல்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

யார் இந்த அக்திக்? - உ.பி. முழுவதும் கொலை, ஆள்கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் அத்திக் அகமது ஈடுபட்டு வந்தார். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.1,200 கோடி வரை அவர் சொத்து சேர்த்ததாகக் கூறப்படுகிறது. பதிவுத் துறை ஆவணங்களின் அடிப்படையில் அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயர்களில் ரூ.11,684 கோடிக்கு சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகள் அனைத்தையும் உ.பி. அரசு முடக்கியுள்ளது.

கடந்த 1989-ம் ஆண்டு முதல் அலகாபாத் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் 5 முறை எம்எல்ஏவாகவும் கடந்த 2004 முதல் 2009 வரை புல்பூர் மக்களவைத் தொகுதி எம்பி ஆகவும் அத்திக் அகமது பதவி வகித்துள்ளார். சமாஜ்வாதி, அப்னா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் அவர் இருந்துள்ளார்.

கடந்த 2005-ம் ஆண்டில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராஜு பால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அத்திக் அகமது, அவரது தம்பி காலித் அசீம் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் முக்கிய சாட்சியான வழக்கறிஞர் உமேஷ் பால் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி கொல்லப்பட்டார். இவ்வழக்கிலும் அத்திக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அதில் அவருக்கு ஆயுள் தண்டனையும், 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

20 mins ago

இந்தியா

25 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

மேலும்