இளைஞரை மனித கேடயமாக பயன்படுத்தியது தவறு: ஜம்மு காவல்துறை அறிக்கை

By பீர்சதா ஆஷிக்

காஷ்மீரில் கல்வீச்சு நடந்த போது, தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ராணுவ வீரர்கள் ஓர் இளைஞரைப் பிடித்து ஜீப்பில் கட்டி வைத்து, மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியது தவறான நடவடிக்கை என்று ஜம்மு காவல்துறை கூறியுள்ளது.

இதுதொடர்பாக, ஜம்மு காவல்துறை வெளியிடப்பட்டுள்ள 2 பக்க  அறிக்கையில், ''விசாரணையின் போது ராணுவ வீரர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, வாக்களித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ஃபரூக் அகமத் தார் என்ற இளைஞரை பிடித்து ஜீப்பில் கட்டி வைத்தது தெரியவந்துள்ளது. அந்த இளைஞர் காம்போரா என்ற இடத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்துக்குச் செல்ல இருந்தார்.

ஆனால் அவரை மனித கேடயமாகப் பயன்படுத்தியது ராணுவ அதிகாரியின் தவறான நடவடிக்கை'' என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை மாநில டி.ஜி.பி. எஸ்.பி.வைத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

என்ன நடந்தது?

காஷ்மீர் மக்களவை தொகுதிக்குக் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. தேர்தலை எதிர்த்து 500-க்கும் மேற்பட்டோர் கலவரத்தில் ஈடுபட்டனர். வாக்குச் சாவடிகளைத் தீ வைத்து கொளுத்தினர். பல இடங்களில் வாக்குச் சாவடிகள் சூறையாடப்பட்டன. பாதுகாப்புப் படையினர் மீது சிலர் கல்வீச்சில் ஈடுபட்டனர்.

கலவரத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 பேர் பலியாயினர். இந்நிலையில், கல்வீச்சு நடந்த போது, தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ராணுவ வீரர்கள் ஃபரூக் அகமத் தார் என்ற இளைஞரை பிடித்து ஜீப்பில் கட்டி வைத்து, மனிதக் கேடயமாகப் பயன்படுத்திய வீடியோ வெளியானது.

இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு மனித நல அமைப்புகள் ராணுவத்தினரின் இந்தச் செயலுக்கு கண்டனங்கள் தெரிவித்தன.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ராணுவப் பிரிவு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்