லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 10 வயது சிறுவன் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து போலீஸார் தரப்பில் கூறும்போது, “உத்தரப் பிரதேசத்தில் உள்ள பஹ்ராச் மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் வர்மா. இவருக்கு 10 வயதில் விவேக் என்ற மகன் உள்ளார். விவேக்கை கடந்த வியாழக்கிழமை முதல் காணவில்லை என்று போலீஸில் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த நிலையில், விவேக் கழுத்து அறுப்பட்டு உயிரிழந்ததை போலீஸார் தேடுதலில் கண்டுபிடித்தனர்.
விவேக்கின் உறவினர் அனுப் என்பவர் தனது மனநிலை பாதிக்கப்பட்ட மகனை குணப்படுத்த தொடர்ந்து முயற்சி எடுத்து வந்திருக்கிறார். ஆனால், மருத்துவம் கைகொடுக்கவில்லை. இதனால், மருத்துவத்தை கைவிட்டு மாந்தீரிக ஆலோசனைப்படி நரபலி கொடுக்க அனுப் சம்மதித்துள்ளார். இதன் பின்னணியில்தான் விவேக் கொல்லப்பட்டிருக்கிறார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக அனுப் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக உத்தரப் பிரதேச போலீஸார் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago