ரோஹிங்கியா முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட வேண்டியவர்கள்: கிரண் ரிஜிஜூ

By சந்தீப் புகான்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் சட்டத்துக்கு விரோதமாக குடியேறியவர்கள், அவர்கள் இந்திய சட்டத்தின்படி நாடு கடத்தப்பட வேண்டியவர்கள் என்று உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.

ரோஹிங்கியா முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட தேவை என்னவென்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று முன் தினம் கேள்வி எழுப்பியிருந்தது.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறும்போது, “இந்த வழக்கு தொடர்பாக சட்டப்பூர்வ அம்சத்தை பற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. எனினும் மனித உரிமை அமைப்புகள் மற்றும் பிற அமைப்புகளுக்கு பதில் கூற வேண்டியுள்ளது. ரோஹிங்கியா முஸ்லிம்கள் சட்டத்துக்கு விரோதமாக குடியேறியவர்கள், அவர்கள் இந்திய சட்டத்தின்படி நாடு கடத்தப்பட வேண்டியவர்கள்” என்றார்.

மியான்மரில் பவுந்தர்களுக்கும், ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மியான்மரில் கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் நடந்த வன்முறை சம்பவங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் வங்கதேசம், மற்றும் அண்டை நாடுகளுக்கு இடப்பெயர்ந்து வருகின்றன.

இந்த நிலையில் வடகிழக்கு மாநிலங்கள் ஜனநாயக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், அசாம் சுகாதாரத் துறை அமைச்சர் பிஸ்வா சர்மா கூறும்போது, “ரோஹிங்கியா முஸ்லிம்களை திருப்பி அனுப்பப்பட வேண்டும். வடகிழக்கு மாநிலங்கள் அகதிகளை ஏற்று கொள்ள கூடாததில் தெளிவாக உள்ளன” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

13 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்