புதுடெல்லி: எனது குடும்பத்தை அவமதித்த பாஜக தலைவர்களுக்கு சிறை தண்டனை விதிக்க எந்த நீதிபதியும் உத்தரவிடவில்லை என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி தகுதி நீக்கம் தொடர்பாக பேசியுள்ள ப்ரியங்கா காந்தி, "ராகுல் காந்தி, நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அதானி குழுமம் குறித்து கேள்வி எழுப்பியதால் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார். நாங்கள், நாட்டிற்காக தியாகம் செய்தவர்களின் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள், போர்களை கண்டு அஞ்சி தப்பி ஓட மாட்டோம். உங்களுக்கு என்ன தோணுகிறோதோ அதை செய்யுங்கள். ஆனால், காங்கிரஸ், ராகுல் என நாங்கள் அனைவரும் அதை எதிர்த்து போராடுவோம்.
பாஜக செய்தித் தொடர்பாளர்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள், அவ்வளவு ஏன் பிரதமர் மோடியே எனது சகோதரர், தந்தை, தாய், இந்திரா காந்தி, ஜவஹர்லால் நேரு என எங்களின் குடும்பத்துக்கு எதிராக தொடர்ந்து அவதூறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இது முழு நாட்டிற்கும் தெரியும்.
ஆனாலும் எந்த நீதிபதியும் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவில்லை, தகுதி நீக்கமும் இல்லை. இதெல்லாம் ஏன் நடக்கிறது.. என் சகோதரர் என்ன செய்தார்? அதானி குழுமம் குறித்து அவர் கேள்வி எழுப்பினார், அதுதான் இதெற்கெல்லாம் காரணம்" என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
29 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago