மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் 5 அம்ச தடுப்பு நடவடிக்கையை பின்பற்றுங்கள் - மத்திய சுகாதார துறை அறிவுரை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மாநில அரசுகள் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் தினசரி கரோனா தொற்றுஎண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று 1,300 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. கடந்த 140 நாட்களில் இது அதிகபட்ச எண்ணிக்கை ஆகும். இந்நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.

மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும், கரோனா பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை,கரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகள், தடுப்பூசி செலுத்தல் ஆகிய 5 வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், மருத்துவமனைகளில் போதிய படுக்கைகளும் மருத்துவப் பணியாளர்கள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

பிரதமர் ஆலோசனை: நேற்றுமுன்தினம் இன்புளு யன்ஸா மற்றும் கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத் துறை மாநிலங்களுக்கு முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.

1,300 ஆக அதிகரிப்பு: நாட்டில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகா தாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகி றது. நேற்று ஒரே நாளில் 1,300 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கரோனா வுக்கு சிசிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 7,605-ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் கரோனாவுக்கு 3 பேர் உயிரிழந்தனர்.

இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,30,816 ஆக அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு 1.46 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு 1.08 சதவீதமாகவும் உள்ளது. கரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் 98.79 சதவீதமாக உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 89,078 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை 220.65 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

44 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்