டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழக்கலாம் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீனும் வழக்கப்பட்டுள்ளது. ரூ.10,000 பிணையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் ராகுல் காந்தியின் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது. உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் பொருட்டு தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
எம்.பி. பதவியை இழக்கும் ராகுல்?: அவதூறு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தி எம்.பி. பதவியை இழக்க அதிக வாய்ப்புள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதி ஏதாவது ஒரு வழக்கில் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக தண்டனை விதிக்கப்பட்டால் அவர் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவார். மேலும் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. தகுதி நீக்கத்தில் இருந்து 3 மாதங்கள் சலுகை பெரும் நடைமுறை, கடந்த 2013ம் ஆண்டு லில்லி தாமஸ் வழக்கு மூலம் உச்ச நீதிமன்றத்தால் நீக்கப்பட்டது. இதன்மூலம், தண்டனை பெற்ற உடனேயே எம்.பி., எம்.எல்.ஏ-க்களின் பதவி ரத்தாகும்.
» ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஜாமீனும்: காங்கிரஸின் நகர்வு முதல் எதிர்வினைகள் வரை
ராகுலின் வழக்கை பொறுத்தவரை, அவருக்கு தண்டனை வழங்கியுள்ள சூரத் நீதிமன்றம் தனது தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. இந்த ஒரு மாதத்திற்குள் உயர் நீதிமன்றத்தில் இந்த தீர்ப்புக்கு தடை வாங்கவில்லை என்றால், ஒருமாதம் கழித்து ராகுல் காந்தியின் தகுதிநீக்கம் செல்லுபடியாகத் தொடங்கிவிடும். இதனால் ராகுல் காந்தியின் நிலை என்னவாகும் என்பது அவரது அடுத்த நகர்வைப் பொறுத்து முடிவாகும்.
அதேநேரம், சமீபத்தில், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லட்சத்தீவுகள் எம்பி முகமது பைசல் கொலை முயற்சி வழக்கில் முதலில் ஜனவரி மாதம் லட்சத்தீவு நீதிமன்றம் தண்டனை வழங்கியது. இதனால் எம்பி பதவியை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. ஆனால் ஒருவாரத்தில் அவர் கேரள கேரள உயர் நீதிமன்றத்தை அணுகி தண்டனை உத்தரவுக்கு தடை பெற்றார். மேலும் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்ற உத்தரவையும் பெற்றார்.
லோக்சபா சபாநாயகர் அலுவலக வட்டாரமோ, “அவரை தகுதி நீக்கம் செய்வதற்கான புகாருடன் சபாநாயகர் அலுவலகத்திற்கு உத்தரவு வரட்டும். உத்தரவுடன் புகார் வந்தால், சட்ட வல்லுனர்களைக் கொண்டு, ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் சொல்வது என்ன?: ராகுல் காந்தியை பொறுத்தவரை, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யாவிட்டால் அவர் தகுதிநீக்கம் செய்யப்படலாம் என்பதை ஒப்புக்கொண்டுள்ள காங்கிரஸ், இந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டு விசாரிக்கப்படும் வரை ராகுல் நாடாளுமன்றத்திற்கு வரமாட்டார் என்றும் தெரிவித்துள்ளன.
ஹிண்டன்பர்க்-அதானி பிரச்சினையைத் தொடர்ந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி பேசிய கருத்துக்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கடந்த 7 நாட்களாக ஆளும் பாஜக எம்பிக்கள் போராடி வருகின்றனர். நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ராகுல் கலந்துகொள்வதை தடை செய்ய வேண்டும் என்பதே அவர்களின் ஒற்றை கோரிக்கையாக இருக்கிறது. இப்படியான நிலையில் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு ராகுலின் மக்கள் பிரதிநிதியின் எதிர்காலத்தை எந்தவகையில் பாதிக்கும் என்பதை அவரின் அடுத்தகட்ட நகர்வுகளை வைத்தே அமையும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago