பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர்: 6 பேர் கைது; டெல்லி போலீஸார் தீவிர விசாரணை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தலைநகரில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டியது தொடர்பாக,100 எஃப்ஐஆர் பதிவு செய்துள்ள டெல்லி போலீஸார்,அது தொடர்பாக 6 பேரைக் கைது செய்துள்ளனர்.

டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பிரதமர் மோடிக்கு எதிரான போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.அந்த போஸ்டர்களில்,"மோடி ஹட்டாவோ, தேஷ் பச்சோ" (மோடியை அகற்றி நாட்டைக் காப்பாற்றுங்கள்) என்ற வாசகம் இடம்பெற்றிருந்தன. இதுதொடர்பாக, சிறப்பு காவல் ஆணையர் தீபேந்திர பதாக் கூறுகையில்,"நகர் முழுவதும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறு கருத்துக்களைப் பரப்பும் போஸ்டர்கள் ஒட்டியது தொடர்பாக போலீஸார் 100 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆம் ஆத்மி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட வேன் ஒன்றை மறித்து போலீஸார் சோதனை செய்தனர். அப்போது வேனில் இருந்து ஆட்சேபத்திற்குரிய போஸ்டர்கள் கைப்பற்றப்பட்டன. அதிலிருந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்துவருகிறது" என்று தெரிவித்தார். மேலும், அச்சக சட்டம் மற்றும் சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துதல் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

இருந்தபோதிலும், இந்த போஸ்டர்கள் அச்சிடப்பட்ட அச்சகம், அதன் உரிமையாளர்கள் தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்