இந்தியாவில் 1,000-ஐ கடந்த அன்றாட கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 1,134 பேருக்கு தொற்று

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 1,134 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,026 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழை) ஒரே நாளில் 1,134 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 7,026 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நேற்று பாதிப்பு 1,000 கடந்துள்ளது.

கரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 60 ஆயிரத்து 279 ஆக உள்ளது. கரோனா தொற்றால் சத்தீஸ்கர், டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் தலா ஒருவர் இறந்துள்ளனர். இதன்படி, கரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 813 ஆக உள்ளது.

இதுவரை நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், 220.65 கோடி கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE