இந்துத்துவாவை விமர்சித்ததாக கன்னட நடிகர் சேத்தன் கைது

By இரா.வினோத்


பெங்களூரு: கன்னட நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான சேத்தன் நேற்று முன்தினம் தனது ட்விட்டர்பதிவில், “இந்துத்துவ அரசியல் என்பது பொய்களால் கட்டமைக்கப்பட்டது. ‘ராவணனை ராமன் தோற்கடித்து அயோத்திக்குத் திரும்பியபோது இந்திய தேசத்தை தொடங்கினார்’ என சாவர்க்கர் கூறியது மிகப்பெரிய பொய் ஆகும்.

பாபர் மசூதியில் ராமர் பிறந்தார் என்பதும் திப்பு சுல்தானை கொன்றவர்கள் ஊரிகவுடா-நஞ்சேகவுடா என கூறுவதும் பொய் ஆகும். பொய்களால் கட்டமைக்கப்பட்ட இந்துத்துவ அரசியலை உண்மையால் தோற்கடிக்க முடியும்” என விமர்சித்திருந்தார்.

இதுதொடர்பாக பெங்களூ ருவை சேர்ந்த பஜ்ரங் தளம் நிர்வாகி குமார் நேற்று சேஷாத்ரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார், நடிகர் சேத்தனை உடனடியாக கைது செய்தனர். பெங்களூரு மாநகர அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, அவரை சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

6 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்